சென்னை – நெல்லை சிறப்பு வந்தே பாரத்

சென்னை:நவ.8- தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை – நெல்லை இடையே நவம்பர் 9ம் தேதி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கும், நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கும் புறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “சென்னை எழும்பூர் – திருநெல்வேலி தீபாவளி சிறப்பு வந்தே பாரத் விரைவு ரயில் எண் 06067 சென்னை எழும்பூரில் இருந்து நவ.9ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
எண் 06068 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் தீபாவளி சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.