சென்னை பாதிப்புகளை பார்வையிடும் ராஜ்நாத்சிங்

சென்னை,டிச.7-
மிக்ஜம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை
மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ளபாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று
(வியாழக்கிழமை) சென்னைக்கு வருகிறார்.இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்குவிமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.15
மணிக்கு சென்னை விமான நிலையத்தைவந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில்
புறப்பட்டு பிற்பகல் 12.20 மணி முதல் 1.10மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.