சென்னை மைசூருக்கு 2வதுவந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது

பெங்களூர் : ஏப். 5 : தென் மேற்கு ரயில்வே தலைமை பொது விவகார அதிகாரி மஞ்சுநாத் தெரிவிக்கையில் வந்தே பாரத் என்ற சொகுசு ரயிலுக்காக அனைத்து முன் ஏற்பாடுகளும் மைசூரு ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. என்றார். கடந்த மார்ச் 12 அன்று பிரதமர் நரேந்திர மோதி முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். மார்ச் 14 முதல் ஏப்ரல் நான்கு வரை இந்த ரயில் பெங்களூரின் வில்வேஸ்வரய்யா ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று வந்தது. இதற்க்கு வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களை பராமரிக்க மைசூரில் வசதிகள் இல்லாததே காரணம் . தவிர புதன்கிழமைகளில் வந்தே பாரத் ரயில் ஒட்டப்படுவது இல்லை. இன்று முதல் 20663/20664 ரயில் கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்களூரு மார்கமாக மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லும். ஏப்ரல் 5 முதல் ஜூலை 29 வரை இந்த ரயில் புதன்கிழமைகளில் ஓடாது. பின்னர் ஜூலை 30க்கும் பின்னர் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் ஓடாது. சில தொழில்நுட்ப காரணங்களுக்காக தென்மேற்கு ரயில்வே இந்த மாற்றங்களை செய்துள்ளது. முதல் வந்தே பாரத் ரயில் மைசூரிலிருந்து சென்னைக்கு கடந்த நவம்பர் 2022லிருந்து ஓடிக்கொண்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 க்கு புறப்பட்டு மைசூருவை 12..20 மணிக்கு வந்து சேர்கிறது. திரும்பவும் மைசூரிலிருந்து 1.05 க்கு புறப்பட்டு சென்னையை 7.20 க்கு சேர்கிறது. இந்த ரயில் சென்னையில் தெற்கு ரயில்வே துறையால் பராமரிக்கப்படுகிறது. இப்போது இரண்டாவது வந்தே பாரத் ரயில் மைசூர் மற்றும் சென்னைக்கிடையே விடப்பட்டுள்ளது. இந்த புதிய வந்தே பாரத் ரயில் மைசூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை 12.25 மணியளவில் சென்றடையும். இந்த ரயில் மண்டியா , பெங்களூர் கே எஸ் ஆர். கே ஆர் புரம் , மற்றும் காட்பாடி காஃபியை ரயில் நிலையங்களில் சற்றே நிற்கும் , பின்னர் மாற்று வழியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 க்கு மைசூர் வந்து சேரும்.