சென்னை – மைசூரு வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம்

சென்னை, நவம்பர். 7 –
நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது.
160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள் புதுடெல்லி – வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் – மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரெயில் தென்னிந்தியாவின் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.