செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்

சென்னை: செப். 10-
தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய், செப்​.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்ளார்.
சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு தவெக தலை​வர் விஜய், செப்​. 13-ம் தேதி முதல் கட்ட சுற்​றுப்​பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்​கு​கிறார்.
இதற்​கான அனு​மதி கோரி திருச்சி காவல் ஆணை​யரிடம் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் விண்​ணப்​பித்​திருந்​தார். ஆனால் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்​துக்கு அனு​மதி கோரி டிஜிபி அலு​வல​கத்​தில், ஆனந்த் நேற்று மனு அளித்​தார்.
அந்த மனு​வில் இடம் பெற்றுள்ள சுற்​றுப்​பயண விவரம்: செப்​.13-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை தவெக தலை​வர் விஜய் சுற்​றுப்​பயணத்தை மேற்​கொள்​கிறார். மொத்த சுற்​றுப்​பயண​மும் சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. செப்​.13-ம் தேதி திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர் மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணத்தை விஜய் தொடங்​கு​கிறார்.
சிவகங்​கை, ராம​நாத​புரம், டிச.6 தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, டிச.13 சேலம், நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களி​லும் பயணத்​தைத் தொடர்​கிறார். டிச.20-ல் திண்​டுக்​கல், தேனி, மதுரை மாவட்​டங்​களில் நிறைவு செய்​கிறார்.
வழக்​குப்​ப​திவுக்கு கண்​டனம்: இதற்​கிடையே, கடந்த 6-ம் தேதி தவெக பொதுச்​செய​லா​ளர் ஆனந்த், திருச்சி சென்​றபோது அவரை வரவேற்க தொண்​டர்​கள் திரண்​ட​தால் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.
இதனால் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறு ஏற்​படுத்​தி​யதாக ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இதற்கு தவெக தலை​வர் விஜய் கண்​டனம் தெரி​வித்துள்ளார்.