செப்.19ம் தேதி விசாரணைக்கு வர டி.கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

புது டெல்லி : செப்டம்பர். 15 – சட்டவிரோத நிதி பரிமாற்றம் வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமாருக்கு மீண்டும் சங்கடம் ஏற்பட்டுள்ளது . இம்மாதம் 19 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டி கே சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டமன்ற கூட்ட தொடர் நடந்துவரும் நிலையில் அன்று விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலையில் கால அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு டி கே சிவகுமார் கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ள சிவகுமார் சட்டமன்ற கூட்டம் மற்றும் ராகுல் தலைமையில் தற்போது நடந்து வரும் பாரத் ஜோடோ பாதயாத்திரை நடந்து வரும் வேளையில் எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராய் இருப்பதாக தெரிவித்துள்ளார். சம்மன் அளித்திருக்கும் நேரம் மற்றும் குழப்பங்களால் அரசியல் மற்றும் பொது கடமைகளை செய்வதில் தடைகள் ஏற்படுகிறது. என சிவகுமார் தன் டீவீட்டில் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டில் வருமானவரி துறை அதிகாரிகள் டி கே சிவகுமாருக்கு தொடர்பான இடங்களில் சோதனைகள் நடத்தினர். அவருடைய டெல்லி வீட்டிலும் சோதனைகள் நடந்த போது 8.59 கோடி ரூபாய்கள் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டது . அப்போது சிவகுமார் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நிதி பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளுக்கும் இதற்க்கு முன்னர் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.