செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் 3 பேருக்கு சிறை

பெங்களூர் ஜன .12-
சிங்கநாயக்கன ஹள்ளி ஆவலஹள்ளி ஆகிய இடங்களில் குடோனில் பதுங்கி வைத்திருந்த 7 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகள் வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின்னர் சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணையில் ராஜ் டிரேடர்ஸ், ஜெயம் இம் பக்ஸ் நிறுவனங்கள் பேரில் கிரானைட் ஏற்றுமதிக்கான போலி வாடகை ஒப்பந்த சான்றிதழ் தயாரித்து சட்ட விரோதமாக செம்மரம் கடத்தும் வேலையை சையத் இப்ராஹிம், ஜெயராஜ், அருண் முனிசாமி ஆகியோர் செய்து வந்தனர். கலால் துறை விசாரணைக்கு பிறகு இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்றப் பட்டது.
நீதிபதி ரவீந்திர குமார் கட்டிமணி முன்னிலையில் நடந்த விசாரணைக்குப் பிறகு மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.