செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

பெங்களூரு, மார்ச் 15-
செருப்புக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த நபரை தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து
69.40 இலட்சம் பெறுமதியான 1 கிலோ 205 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்துவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது இது கண்டுபிடிக்கப்பட்டது.
பாங்காக்கில் இருந்து பெங்களூரு வந்த குற்றவாளிகள் தங்கத்தை சிறு துண்டுகளாக செருப்புக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது