செல்போனில் அதிக சத்தமாக பேசியதால் தகராறு- கொலையில் முடித்தது

பெங்களூர், மார்ச் 26- செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந் ததால் ஆத்திரம் அடைந்த சகோதரி இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.தகராறு முற்றி ஒருவர் கொலையில் முடிந்துள்ளது.இச்சம்பவம், பரப்பன அகரஹாரா போலீஸ் எல்லையில் நடந்துள்ளது. குடியா தேவி, கீதா குமாரி, ஆகிய சகோதரிகள் இருவரும் பரப்பன அக்ர ஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிங்கச் சந்தராவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அக்கா, குடியாதேவிக்கு சரியாக காது கேட்காது. காது மந்தம். அதனால் செல்போனில் சத்தமாகவே பேசுவார். இவருக்கும், தங்கை கீதா குமாரிக்கும், திருமணம் ஆகவில்லை. இவர்களுடன் உணவு விநியோகம் செய்யும் ராஜேஷ் என்பவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.ஞாயிற்றுக்கிழமை இரவு 8 :15 மணியளவில் அக்கா குடியாதேவி, தனது மொபைல் போனில், சப்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை தங்கை கீதா எச்சரித்தார்.இதனால் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. வீட்டுக்குள் இருந்த ராஜேஷ் சண்டையை சமாளிக்க முயற்சித்தார். ஆயினும் அக்கா தங்கை தகராறுகள் அதிகரித்தது.இதனால், ராஜேஷ் குடியா தேவியை தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தார். அதன் பின்னர் தடியால் கழுத்தை பிடித்து நெறித்துள்ளார். இந்நிலையில் குடியாதேவி மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தார். அக்கா குடியாதேவி சுயநினைவு இழந்ததை அடைந்து, அதிர்ச்சி அடைந்த தங்கை, கீதா குமாரி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்ன நடந்தது என்று மருத்துவர் கேட்டுள்ளார். ஏதோ மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார் என்று கீதா கூறியுள்ளார். குடியாதேவியை பரிசோதித்த டாக்டர் குடியாதேவி இறந்து விட்டதாக தெரிவித்தார். கீதா குமாரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ராஜேஷ்குமாரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இவர் தாக்கியது, கழுத்தை நெருக்கியது, இதனால் அவர் உயிரிழந்தது, ஆகிய உண்மைகளை அவர் கக்கி விட்டார்.
இதனால் போலீசார் கீதா மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான கீதாவும் ராஜேஷும் காதலர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.