பெங்களூர் : அக்டோபர் : 7 – அதி புத்திசாலியாக நடித்து மொபைல் , பர்ஸ் மற்றும் பிற பொருட்களை அபகரித்துவந்த ஒருவனை ஹோசகோட்டே போலீசார் கைது செய்துள்ளனர் . வினய் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதுடன் இவனிடமிருந்து 50 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள பல நிறுவங்களை சேர்ந்த 150க்கும் அதிகமான மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன . வினய் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையங்களில் புத்திசாலியாக நடித்து பஸ்களில் நெருக்கிக்கொண்டு மக்கள் ஏற மற்றும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகளின் போன்கள் மற்றும் பர்ஸுகளை திருடி வந்துள்ளான் . பின்னர் தான் திருடிய போன்களின் பாஸ் வோர்டுகளை திறந்து கூகுள் பே மற்றும் போன் பேக்கள் செய்துவந்துள்ளான் . பின்னர் ஓ டி பிக்களை பெற்று ஆன் லைன் வாயிலாக தன்னுடைய ஆந்திரா , தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரா மாநில நண்பர்களுக்கு பணங்கள் அனுப்பிவந்துள்ளான் . பின்னர் இதே வங்கி கணக்கில் பணங்களை பெற்று சொகுசு வாழக்கை வாழ்ந்து வந்துள்ளான் . இந்த வகையில் 150க்கும் மேற்பட்ட போன்கள் வாயிலாக பெருமளவில் பணத்தை அபகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .