சைக்கோ காமுகன் உமேஷ் ரெட்டி தூக்கு தண்டனை ரத்து

புதுடெல்லி, நவ.4- சைக்கோ காமுகன் உமேஷ் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. விதவை பெண்ணை கற்பழித்து கொன்றது உள்ளிட்ட பல்வேறு பாலியல் வழக்கில் உமேஷ் ரெட்டிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இருந்தது உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய உமேஷ் ரெட்டிக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமேஷ் ரெட்டி. இவர், முதலில் போலீஸ்காரராக பணியாற்றி இருந்தார். பின்னர் அவர், பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த விதவை பெண்ணை, கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி உமேஷ் ரெட்டி கற்பழித்து, கொடூரமாக கொலை செய்திருந்தார். இதுதவிர மேலும் சில பெண்களை அவர் கற்பழித்து கொலை செய்ததாகவும் வழக்குகள் உள்ளது. பீனியாவில் விதவை பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கின் விசாரணை பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு உமேஷ் ரெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை கூறி இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் உமேஷ் ரெட்டி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்ததுடன், அவருக்கு கீழ் கோர்ட்டு விதித்திருந்த தூக்கு தண்டனையை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் உமிழ்சரட்டியின் தூக்கு தண்டனையை இன்று ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இதுபோன்ற கொடூர குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டியது நியாயம் தான் ஆனால் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தூக்கு தண்டனை நிறைவேற்றுவது சரியாக இருக்காது என்று கூறிய உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது