சைத்ரா குந்தாப்புரா உள்ளிட்ட 6 பேருக்கு 23ம் தேதி வரை போலீஸ் காவல்

பெங்களூரு, செப்டம்பர் 13- எம்எல்ஏ டிக்கெட் வழங்குவதாக கூறி ரூ.5 கோடி. மோசடி செய்த வழக்கில் வழக்கில் இந்து ஆர்வலர்கள் சைத்ரா குந்தாபுரா, ஸ்ரீகாந்த், ரமேஷ், ககன், பிரஜ்வல் மற்றும் தன்ராஜ் ஆகியோரை செப்டம்பர் 23ம் தேதி வரை சிசிபி காவலில் ஒப்படைக்க நகர 1வது ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இவர்களை 14 நாட்களில் தமது காவலில் வழங்க சிசிபி அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். சைத்ரா குந்தாபூர் நீதிபதியின் முன் கண்ணீர் விட்டு அழுதார், கைது நடவடிக்கை குறித்து நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறும் போது போலீசார் என்னை கைது செய்த போது கைகளை அழுத்தமாக பிடித்து இழுத்தனர் இதனால் எனது கைகளில் வலி ஏற்பட்டு உள்ளது எனது அம்மாவிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றார்.
விசாரணை அதிகாரி ரீனா சுவர்ணாவிடம் நீதிபதி, கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றார். நீதிபதியிடம் சைத்ரா குந்தாபுரா பல்வேறு புகார்களை கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியது