சைத்ரா மோசடி – பெரும்புள்ளி தொடர்பு

பெங்களூர் செப்டம்பர் 14
எம்எல்ஏ டிக்கெட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ள தீவிர இந்து மத ஆர்வலர் சைத்ரா குந்தாபுரம் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார் இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளி தொடர்பு இருப்பதாக அவர் அம்பலப்படுத்தி உள்ளார் இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
எம் எல் ஏ டிக்கெட் கொடுப்பதாக கோடிகள் ரூபாய்கள் அளவிற்கு மோசடிகள் செய்து தற்போது சிசி பி போலீசாரிடம் சிக்கியுள்ள கும்பலின் முக்கிய புள்ளி பயர் பிராண்ட் புகழ் தீப்பொறி பேச்சாளர் சைத்ரா குந்தாபுரா விசாரணையில் சட்டமன்ற தொகுதி டிக்கெட் மோசடிக்கு பின்னர் பெரிய அரசியல் தலைவரின் தொடர்பு இருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . உடுப்பியில் கிருஷ்ணா மட வாகன நிறுத்துமிடத்திலிருந்து சைத்ரா குத்தாப்புறாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை நகருக்கு கொண்டு வந்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது தன்னுடைய நடவடிக்கைகளின் பின்னர் பெரிய அரசியல் புள்ளி இருப்பதாக சைத்ரா தெரிவித்திருப்பது
அரசியல் வட்டாரத்தில் குதூகலம் மற்றும் சர்ச்சைக்கு கிளப்பியுள்ளது . ஸ்வாமிஜி சிக்கி கொள்ளட்டும் . அனைத்து உண்மைகளும் வெளியே வரும் பல பெரியவர்களின் பெயர்களும் வெளியே வரும் . நான் முதல் குற்றவாளியாயிருக்கலாம். ஆனால் உண்மைகள் வெளியே வந்தால் பலரின் பெயர்கள் தெரிய வரும். சைத்ரா ஸ்வாமிஜி என தெரிவித்திருப்பது விஜயநகர் மாவட்டத்தின் ஹுவினாடக்ளியின் ஹீரேஹடகளி மடத்தின் அபிநவ ஹாலஸ்ரீ ஸ்வாமிஜி என்பது விசாரணையில்
தெரியவந்துள்ளது . தற்போது இந்த விவகாரத்தில் ஸ்வாமிஜி மூன்றாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த ஸ்வாமிஜி கோவிந்த பூஜாரியிடமிருந்து நேரடியாக 1.5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.