சைபர் கிரைமில் ஆமிர்கான் புகார்

மும்பை, ஏப். 17- மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தி நடிகர் ஆமிர்கான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது போல வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை மறுத்துள்ள ஆமிர்கானின் செய்தி தொடர்பாளர், “ஆமிர்கான் இதுவரை எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்ததில்லை. குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரிப்பதாக அவர் கூறும் வீடியோவில் உண்மையில்லை. அது போலியானது. இதுதொடர்பாக மும்பை சைபர் கிரைமில் புகார் செய்துள்ளோம். அனைத்து இந்தியர்களும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார். அமீர் கானின் அந்த வீடியோ, 10 வருடங்களுக்கு முன், அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் இருந்து எடுத்து, ஏ.ஐ மூலம் எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.