சைபர் குற்றங்கள் இந்தியாவில் பெங்களூர் முதலிடம்

பெங்களூர் : டிசம்பர் . 8 – நாட்டில் பதிவாகியுள்ள சைபர் குற்றங்கள் எண்ணிக்கையில் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்தில் இருப்பதுடன் மாநகரங்களில் ஒப்பிடுகையில் பெங்களூர் நகரம் நாட்டிலேயே சைபர் குற்றங்களின் முதல் இடமாய் திகழ்கிறது. நாட்டில் கடந்த 2021ல் 52974 சைபர் குற்றங்கள் பதிவாகின. தவிர 2022ல் 65293 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கர்நாடகா இரண்டாவது இடத்திலும் மாநகரங்களில் பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கானாவில் 15297 சைபர் குற்றங்கள் பதிவான நிலையில் அம்மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 12256 வழக்குகள் பதிவாகியுள்ள கர்நாடக மாநிலம் மற்றும் 10117 வழக்குகள் பதிவாகியுள்ள உத்தரபிரதேசம் மாநிலங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சைபர் குற்றங்கள் மட்டுமின்றி 11 சதவிகித பொருளாதார குற்றங்கள் , 9 சதவிகித முதியோருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான 4 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளது குறித்து சமீபத்தில் தேசிய குற்றவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடு முழுக்கஉள்ள மாநகரங்களில் பதிவாகியுள்ள சைபர் குற்றங்களில் பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் நகரில் 2021ல் 6423 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. தவிர 2022ல் 9940 வழக்குகள் பதிவாகி நாட்டிலேயே முதல் மாநகரமாக பெங்களூர் திகழ்கிறது. 4724 புகார்கள் பதிவாகியுள்ள மும்பை மற்றும் 4436 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ள ஹைதராபாத் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. தவிர குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களிலும் கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. 2022ல் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச வீடியோ படங்கள் மற்றும் வேறு பல குற்றங்கள் தொடர்பாக 239 புகார்கள் பதிவாகியுள்ளன. தலா 182 புகார்கள் பதிவாகியுள்ள கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. தவிர 178 புகார்கள் பதிவுடன் மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது. தவிர சைபர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மாநில போலீசார் மிகவும் பின் தங்கியுள்ளனர். 2022ல் பதிவான 12556 வழக்குகளில் இதுவரை 612 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட வெறும் 679 குற்றவாளிகளை மட்டுமே மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் 10117 வழக்குகள் பதிவான உத்தரப்பிரதேஸ்வத்தில் 7107 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உட்பட 7122 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் நகரம் தகவல் தொழில் நுட்ப தலைநகராக இருக்கும் நிலையில் இங்கு சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தங்கள் பணிகளுக்கு ஆயுப்களை பயன்படுத்துவதும் இதற்க்கு ஒரு காரணமாகும். நாம் பெங்களூரில் அதிக தொழிலிவுட்பத்தை பயன்படுத்துவதை கண்டு வருகிறோம். இந்த நிலையில் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் பலரும் நகரில் சிக்கி வருகின்றனர். தவிர தேசிய புலனாய்வு குற்றவியல் துறைக்கு தெரியாத பல வழக்குகளும் உள்ளன என சைபர் வல்லுநர் பணீந்திரா தெரிவித்துள்ளார்.