சைபர் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

பெங்களூர், பிப்.22- சிலரின் பேரில் வங்கி கணக்குகள் தொடங்கி டெலிகிராம் குரூப் மூலம் விற்பனை செய்யும் வலையமைப்பை கண்டறிந்த, சிஐடி போலீசார் சந்தேகத்திற்குரிய குழுக்களை முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் சைபர் மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மோசடி செய்பவர்கள் அப்பாவி பொதுமக்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, மாற்றுகின்றனர்.
இதுபோன்ற கணக்குகளின் விவரங்களை சமூக வலைத்தளமான டெலிகிராம் குழுக்கள் மூலம் மோசடி செய்பவர்கள் வாங்குவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெடெக்ஸ் கூரியர், லோன் ஆப், நிர்வாண வீடியோ அழைப்பு மிரட்டல், பரிசு கவர்தல், வீட்டிலிருந்து வேலை செய்தல், உள்ளிட்ட பல்வேறு வகையான சைபர் மோசடியில் பதிவாகி வருகின்றன. இந்த அனைத்து மோசடிகளுக்கும் அப்பாவி பொதுமக்களின் வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என, சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மோசடி வழக்கை விசாரிக்கும் போது பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட கணக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. கணக்கு வைத்திருப்பவரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில் அவர் எந்த கணக்கும் திறக்கவில்லை என்பதும், எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை என்பதும், தெரியவந்தது. அப்போதுதான் வங்கி கணக்குகளை திறந்து விற்பதற்கான துப்பும் கிடைத்துள்ளது.
ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் மோசடி செய்பவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கென வங்கி கணக்குகளின் பெரிய நெட்வொர்க் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. நெட்வொர்க்கில் உள்ள பலர், ஏற்கனவே சிக்கி உள்ளனர். கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆவண சேகரிப்பு, கிராமப்புறம் நகர்ப்புறம், குடிசை பகுதிகள் ஏழைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சுற்றி திரியும் குற்றவாளிகள், கணக்கெடுப்பு என்ற பெயரில் மக்களிடம் ஆவணங்களை சேகரிக்கிறார்கள்.சில இடங்களில் ஆட்களுக்கு பணம் கொடுத்து ஆவணங்களை பெற்று வருகின்றனர். சிலர் ஆன்லைனில் பதிவேற்ற ஆவணங்களை கூகுளில் பதிவிறக்கம் செய்கிறார்கள் என்று சிஐடி வட்டாரம் தெரிவிக்கிறது பொதுமக்களின் ஆவணங்களை சேகரிக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், அதே ஆவணத்தை பயன்படுத்தி ஆன்லைனில் வங்கி கணக்குகளை தொடங்குகின்றன.மேலும் போலியாவணங்கள் பயன்படுத்தி வாங்கிய மொபைல் எண்களை கணக்கில் இணைத்து வருகின்றனர்.கணக்கு பரிவர்த்தனைக்கு அதே மொபைல் எண் மூலம் செயல்படுத்துகின்றனர். கணக்குகளை திறக்க தனி முகவர்கள் பணியாற்றி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஒரு கணக்கில் பத்தாயிரம் முதல் 25000 வங்கி கணக்குகளை திறக்கும் குற்றவாளிகளை, டெலிகிராம் செயலில் சொந்த குழுவை உருவாக்கியுள்ளனர். விற்பனைக்கான கணக்குகள் என்று விளம்பரம் செய்கின்றனர். ஒரு கணக்கு விவரம் பத்தாயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது என்று சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.