சைபர் மோசடிகளுக்கு தீர்வு அவசியம்

பெங்களூர்: ஜூன். 2 – சமுதாயத்தில் நாளுக்கு நாள் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அனைவருமே இத்தகைய குற்றங்களிலிருந்து தப்பிக்க பரிகாரங்களை எதிர்பார்த்து வருகின்றனர் என மாநில ஐ டி பி டி அமைச்சர் டாக்டர் சி என் அஸ்வத்தநாராயணா தெரிவித்துள்ளார். . மாநில அரசின் சைபர் பாதுகாப்பு துறையின் அங்கமான சைபர் மையத்தின் ‘சைபர் வார்த்திக்கா ‘ என்ற வாராந்தரியை வெளியிட்டு அமைச்சர் பேசுகையில் இன்டர்நெட்டுகளை பயன் படுத்துவதற்கு முன்னர் அதை பற்றி சரியான தகவல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் இந்த பிரசுரத்தில் சைபர் குற்றங்கள் பற்றிய தகவல்கள் , மற்றும் புள்ளி விவரங்கள், சட்டமீறல்கள் , நல்ல தகவல்கள் உள்ள போஸ்டர்கள் , மற்றும் போட்டிகள் இடம் பெற்றுள்ளன . கொரோனாவுக்கு பின்னரான காலகட்டத்திற்கு சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகியுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. என அமைவிஹ்வஹா அஸ்வதநாராயணா தெரிவித்தார். இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் கிம்ஸ் நிர்வாக இயக்குனர் மீனா நாகராஜ் , சைசெக் தலைவர் டாக்டர் கார்த்திக் ராவ் பப்பநாடு , கே எஸ் சி எஸ் டி செயலாளர் பேராசிரியர் அசோக் ராயசூரு , செயல் நிர்வகிப்பு செயலாளர் எஸ் ஹேமந்த் குமார் மற்றும் பேராசிரியை நாகரத்தினா ஆகியோர் கலந்து கொண்டனர் .