சைபர் மோசடியில் பெண் வழக்கறிஞரின் 14,57 லட்சங்கள் அபேஸ்

INDIAN WOMEN COUNTING INDIAN CURRENCY

பெங்களூர் : ஏப்ரல் 10 – நகரை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் சைபர் குற்றவாளிகளிகளின் வலையில் இரண்டு நாட்கள் விழுந்து தன்னுடைய 14.57 லட்ச ரூபாய்களை இழந்திருப்பதுடன் அவர்களுக்காக நிர்வாணமாக போஸும் கொடுத்துள்ளார். என போலீசார் தெரிவித்தனர். போலீசார் தெரிவித்தபடி இந்த சம்பவம் ஏப்ரல் 3-5 க்குள் நடந்துள்ளது. இது விஷயமாக பெங்களூர் கிழக்கு பிரிவு சைபர் குற்ற போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெடெக்ஸ் என்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர் அக்கறை பிரிவிலிருந்து பேசுவதாக 29 வயதான பெண்ணுக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. இது ஒரு சர்வதேச கொரியர் நிறுவனம் என்றும் உங்களுக்கு அனுப்பப்பட்ட கொரியர் திருப்பி வந்துள்ளதால் நீங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவு உயரதிகாரியிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளான். பின்னர் அந்த அதிகாரியை இந்த பெண் வழக்கறிஞர் தொடர்பு கொண்டபோது இவருக்கு அனுப்பட்ட பார்சலில் ஐந்து பாஸ்போர்ட்டுகள், மூன்று க்ரெடிட் கார்டுகள் , மற்றும் 140 எம் எம் டி ஏ என்ற போதை மாத்திரைகள் மும்பையிலிருந்து தாய்லாந்திற்கு இவர் பெயரில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளான். தவிர இந்த பார்ஸலை நீங்கள் உங்கள் பெயரில் அனுப்பியுள்ளதாக இருப்பதால் அதிலும் இதில் போதை பொருள்கள் இருப்பதால் இதை நீங்கள் உண்மையாகவே அனுப்பவில்லையென்றால் தாங்கள் மும்பை சைபர் குற்ற பிரிவு போலிசில் நேரில் வந்து புகார் தெரிவிக்க வேண்டும். என்று கூறியுள்ளனர் . பின்னர் இந்த பெண் வழக்கறிஞர் இதற்க்கு ஒப்புக்கொண்டு மும்பை சைபர் குற்றவியல் போலிசில் புகார் தெரிவிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளிகள் இவருடைய தொடர்பை மும்பை சைபர் குற்றவியல் பிரிவுக்கு தொடர்பு கொள்ள வைத்துள்ளனர். மறுபக்கத்திலிருந்து பேசிய அவர்கள் இந்த பெண் வழக்கறிஞருடன் உரையாடும் வகையில் அவருடைய ஏ மெயில் முகவரி மற்றும் ஸ்கைப் விவரங்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் இவர்கள் பெண் வழக்கறிஞரிடம் சட்டவிரோத பார்சல் மற்றும் அவருடைய ஆதார் அட்டை விவரங்கள் குறித்து கேட்டுள்ளனர். இந்த விவரங்களை பெண் வழக்கறிஞர் அனுப்பிய பின்னர் மேலதிகாரிகளிடம் தாங்கள் பேசுவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் இவருடைய ஆதார் அட்டை மனித கடத்தல் மற்றும் போதை பொருள் கடத்தல் குறித்த பல வழக்குகளுக்கு தொடர்பிருப்பதாக மிரட்டியுள்ளனர். பின்னர் இவருடைய உரையாடல் மூத்த சி பி ஐ அதிகாரி என குற்றவாளிகளால் தெரிவிக்கப்பட்ட அபிஷேக் சவுஹான் என்பவருக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் உரையாடலில் பேசுகையில் இந்த பெண் வழக்கறிஞருக்கு எதிராக மனித கடத்தல் , போதை மருந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத நிதிபரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் இந்த பெண் வழக்கறிஞரை இறந்து நாட்கள் அடைத்துவைத்து இவருடைய வருமான விவரங்கள் , தாற்போதைய கையிருப்பு , மற்றும் முதலீடுகள் குறித்து கேட்டு விவரங்கள் சேகரித்துள்ளார். இந்த பெண் வழக்கறிஞரும் அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். அதன் பின் இந்த வழக்கு மிகவும் தீவிர குற்றம் என்றபடியால் முழு விசாரணை முடியும் வரை இது குறித்து வேறு எவருக்கும் தகவல் தெரிவிக்கமாட்டேன் என நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என மிரட்டியுள்ளனர். தவிர உங்கள் வழக்கில் போலீசார் மற்றும் சில அரசியல் முக்கிய புள்ளிகளும் உட்பட்டிருப்பதால் இவரை போலீசார் மற்றும் இவருடைய பெற்றோரிடம் பேசுவதற்கும் மறுத்துள்ளனர்.இவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் இவருடைய போன் காமிராவை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க தெரிவித்துள்ளனர். இந்த பெண் வழக்கறிஞரை இரவு முழுக்க இவர்கள் கண்காணித்து வந்ததுடன் இவருடைய போன் காமிராவையும் செயலில் இருக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கடந்த ஏப்ரல் 4 அன்று இவரை 10 லட்சத்து 78 ஆயிரத்து 993 ரூபாயை நிதின் ஜோசெப்என்பவர் கணக்குக்கு அனுப்ப கூறியுள்ளனர் . பெண் வழக்கறிஞரும் அப்படியே செய்துள்ளார். பின்னர் ஏப்ரல் 5 அன்று குற்றவாளிகள் பெண் வழக்கறிஞரின் கணக்கிலிருந்து மேலும் அமேசான் எயரில் 2.04 மற்றும் 1.74 லட்சங்களை எடுத்துள்ளனர். போதை பொருள் குறித்து சோதிக்க வேண்டும் என இந்த பெண் வழக்கறிஞரை நிர்வாணமும் ஆகியுள்ளனர் . இப்படி தொடந்து நிர்வாணமாக இருக்கவில்லையென்றால் உன்னுடைய மற்றும் உன் குடும்பத்தாரை போதை பொருள் வழக்கில் கைதுசெய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். பின்னர் தன்னை அதிகாரியாக தெரிவித்துக்கொண்ட அதிகாரி இளம் பெண் வழக்கறிஞரிடம் உடனே தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க வில்லை என்றல் இவருடைய நிர்வாண படங்களை அனைத்து வலைத்தளங்களும் அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளான். இந்த புகார் பற்றி சைபர் குற்ற போலிஸார் முழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புவதென்னவெனில் பெரும் படித்த அறிவாளிகளே அதிலும் சட்ட துறையில் உள்ளவர்களே இப்படி ஏமாறும் நிலையில் சாமான்ய மக்கள் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது . எந்த ஒரு சம்மந்தமில்லாத போன் எண் அழைப்பிற்கும் பதில் கொடுக்ககூடாது என்பதோடு உங்களுக்கு அறிமுகமானவர்கள் எண்களுக்கு மட்டுமே நீங்கள் பதிலளிக்க வேண்டும். ஏமாறாதே ஏமாற்றாதே என்பது புரட்சி தலைவர் நமக்கு எப்போதோ சொல்லிக்கொடுத்தது . அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்