சொகுசு விடுதிகளில் தங்கி கட்டணம் செலுத்தாமல் செல்லும் நபர் கைது

பெங்களூர், ஏப். 5- விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்து, சொகுசு விடுதிகளில் தங்கி கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவான குற்றவாளியை, ஹை கிரவுண்ட் போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுதிர் பரோடா (24) என்பவர் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டப்பட்ட சுதிர் இடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது மோசடியை கண்டு கொதிப்படைந்தனர். இதற்காக கொல்கத்தா, ஓடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு விடுதிகளில் தங்கி பில் கட்டாமல் போலி ஆவணங்களை உருவாக்கி தப்பி சென்ற விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 17ம் தேதி அன்று கோர்க்கா ரைபிள்பின் ஐந்தாவது பட்டாலியன் மேஜராக போலி ஆவணத்தைக் காட்டி கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டைக்கு செல்ல முயன்றதாகவும் ,அவர் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த சுதீர் மார்ச் 31ம் தேதி நகரில் உள்ள சொகுசு வீடுகள் தங்கி இருந்ததாகவும், கட்டணம் செலுத்தாமல் தப்பிச்செல்ல இருந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட சுதிர் மார்ச் 31 அன்று வின்சென்ட் மேனார் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அறையை பதிவு செய்திருந்தார்.மேலும் விமான நிலையத்திலிருந்து பி.எம்.டபிள்யூ. காரில் அழைத்து செல்வதற்காக பதிவு செய்திருந்தார். அதன்படி ஓட்டல் ஊழியர்கள் சுதிரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தனர். ஓட்டலில் 17, 346 க்யூ ஆர் குறியீட்டு ஸ்கேன் செய்து பார்த்து அவர் முன் பணம் செலுத்தியதை ஓட்டல் ஊழியர்களிடம் காட்டினார். ஆனால், ஹோட்டல் கணக்கில் பணம் வரவில்லை இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக சுதிர் வாக்குவாதம் செய்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு என கூறி ஊழியர்கள் அறையை கொடுத்தனர். மறுநாள் பி.எம்.டபிள்யு. காரில் என்னை வேறொரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தார். மறுநாள் காரில் சுற்றித்திரிந்த சுதிர், கார் டிரைவரிடம் தன்னை ஏர்போர்ட்டில் இறக்கி விடச் சொன்னார். இதற்கு சம்மதிக்காத டிரைவர், அவரை மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தார். செக்கவுட் செய்த போது பணியாளர் கார், அறை வாடகை உட்பட 80 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு அறிவுறுத்தினர். அப்போது இரவு பில் கட்டியதாக சுதிர் வாக்குவாதம் செய்தார். மேலும் சிறிது கால அவகாசம் தருமாறு கூறிவிட்டு தங்கினார். சிக்கிம் மாநிலம் கான்ஸ்டாக்கில் உள்ள மே பார்க் ஸ்பா ரிசார்ட்டில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட சுதிருக்கு தொடர்ந்து அழைப்புகள் வருவதை ஓட்டல் ஊழியர்கள் கவனித்தனர். இது குறித்து சுதிரிடம் விசாரித்த போது அவர் முன்பு போலிப் பெயரில் ஸ்பாவுக்கு சென்று பில் செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் குற்றவாளிகளை சோதனை செய்தபோது கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதிர் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.இவ்வாறு போலீஸ் துறைக்கு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.