சொத்து தகராறில் தந்தை உள்பட2 பேரை வெட்டிக்கொன்ற மகன்

சிக்கமகளூர் : ஆகஸ்ட். 14 – சொத்து விற்பனை விஷயமாக நடந்த தகராறில் இளைஞன் ஒருவன் கத்தியால் தாக்கி தந்தை மற்றும் மகன் என இரண்டுபேரை கொலை செய்திருப்பதுடன் தாயையும் ஆய்தங்களால் தாக்கியுள்ள கொடூர சம்பவம் முடிகெரே தாலூகாவின் மதுகுண்டி என்ற இடத்தில் நடந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த மகன் சந்தோஷ் என்பவன் சொத்து விற்பனை பணமான 12 லட்ச ரூபாய் பணத்திற்க்காக தன்னுடைய தந்தை மற்றும் இடைத்தரகர் ஆகியோரை கொன்றுள்ளான்.
சந்தோஷ் மற்றும் அவனுடைய தந்தைக்கு சொந்தமான நிலத்தை விற்க கார்த்திக் (45) என்பவரை இடைத்தரகராக நியமித்திருந்தனர். சொத்து விற்ற பணத்தில் பங்கு விஷயமாக தகராறு துவங்கியுள்ளது.
இந்த தகராறில் சந்தோஷ் தன்னுடைய தந்தை பாஸ்கரகௌடா , தாய் மற்றும் இடைத்தரகர் கார்த்திக் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கியுள்ளான் . இவர்கள் மூவரும் படு காயங்களடைந்த நிலையில் மங்களூர் மருத்துவமனையில் தந்தை மற்றும் இடை தரகர் கார்த்திக் இறந்துள்ளனர். தாயின் நிலையம் கவலைக்கிடமாயுள்ளது. கத்தியால் இவர்கள் மூவரையும் தாக்கிவிட்டு சந்தோஷ் நேராக பாலூறு போலீஸ் நிலையத்தில் சென்று சரணடைந்திருப்பதுடன் இவனை கைது செய்துள்ள போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.