
பெங்களூர்: அக்டோபர்14-
காந்தாரா’ மற்றும் காந்தாரா சாப்டர் 1’ என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ள இயக்குநர், நடிகருமான ரிஷப் ஷெட்டி பெங்களூர் வேண்டவே வேண்டாம் என்று தனது சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் காந்தாரா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெரிய ஹிட்அடித்தது. சுமார் ரூ.16 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.407.982 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்துக்கு ரிஷப் ஷெட்டி திரைக்கதை எழுதி இயக்கி, நடித்திருந்தார். காந்தாரா திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தை தொடங்கினார். இந்த திரைப்படத்துக்கும் ரிஷப் ஷெட்டியே கதை எழுதி இயக்கி நடித்துள்ளார். கடந்த 2ம் தேதி வெளியான இந்த திரைப்படமும் மெகா ஹிட் அடித்துள்ளது. கடந்த 3ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. Sacnilk.com நிலவரப்படி இந்த திரைப்படம் ரூ.500 கோடியை வசூலை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரிஷப் ஷெட்டி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பெரிய பெரிய நகரங்களில் வாழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தென்மாநிலங்களை சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக வீடு வாங்கி அல்லது வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.















