சொந்த மகளை கொன்று ஏரியில் வீசிய தந்தை கைது

பெங்களூர் : நவம்பர். 25 – கோலார் தாலுக்காவில் உள்ள கெந்தட்டி கிராமத்தின் ஏரியில் மூன்று வருட குழந்தை ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு பின்னர் காணாமல் போயிருந்த தகவல் மென்பொருள் பொறியாளன் தற்போது போலீசாரிடம் கிடைத்துள்ளான் . ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து ரயிலில் பெங்களூரு மார்கமாக வந்துகொண்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளன் ராகுல் என்பவன் பாகலூர் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில் அவனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்த விவகாரத்தின் உண்மை வெளிவந்துள்ளது. கடன் தொல்லைகள் , முதலீடுகளில் ஏற்பட்ட நஷ்டங்கள், ஆகியவை தன் கைகளில் விளையாடிய சொந்த மகளையே தன் கையால் கழுத்து நெரித்து கொலை செய்ததை போலீசாரிடம் தெரிவித்து கண்ணீர் விட்டுள்ளான். கடந்த நவம்பர் 16 அன்று தன் தன்னுடைய சிறு மகளை தன் கையாலேயே கொன்றுள்ள மென்பொருள் பொறியாளன் ராகுல் தெரிவித்த கதையை கேட்டால் எத்தகையவருக்கும் கண்களில் கண்டிப்பாக கண்ணீர் வடியும். ராகுல் தான் காதலித்து திருமணம் செய்து கொன்ட பவ்யா என்பவருடன் பாகலூரில் உள்ள ராகா அபார்ட்மெண்டில் வசித்து வந்ததுடன் இவர்களின் ஐந்தாறு வருட தாம்பத்திய உறவின் அடையாளமாக மூன்று வருட பெண் குழந்தை ஜெயா இருந்துள்ளாள். கடந்த 2016 முதல் பிட் காயின் மீது முதலீடு செய்து பெருமளவில் நஷ்டத்தை அனுபவித்த ராகுல் கடந்த ஒன்றரை வருடமாக வேலையும் இல்லாமல் அவஸ்தைக்குள்ளாகியிருந்தான். கடந்த நவம்பர் 15 அன்று தன் மகளை பள்ளிக்கு விட சென்ற போது அவனுடைய பிரச்சனைகள் அனைத்தும் அவன் வீட்டு வாயிலில் வந்து காத்திருந்தது. இவனுக்கு கடன் கொடுத்தவர்கள் பலரும் இவன் வீட்டு வாசலில் வந்து காத்திருந்தனர். தான் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் ராகுலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அப்போது ராகுல் தன சோக கதையையும் மகளை தானே கொன்று வீசி எரிந்ததையும் தெரிவித்துள்ளான்.