சொன்னதை செய்த ரோகித் சர்மா: மும்பை இந்தியன்ஸ்க்கு கல்தா

மும்பை, மார்ச் 13- இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள இளம்வீரர்கள் ஓய்வு நேரத்தில் ரஞ்சிப் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு பிசிசிஐ நிர்வாகிகளை கடுப்படைய செய்தது. இதனால் இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் ரஞ்சிப் போட்டிகளில் கண்டிப்பாக விளையாடவேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. இதனை மீறிய ஸ்ரெயாஸ் மற்றும் இசான் கிஷன் ஆகியோருக்கு ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. இந்த நிலையில் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, யாராக இருந்தாலும் சரி கண்டிப்பாக இனி ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய ஆக வேண்டும். சையது முஸ்தாக் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போன்ற தொடர்களில் விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதை மறைமுகமாக கூறினார். இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பயிற்சி முகாமை தொடங்கியது.
ஆனால் ரோகித் சர்மா நேராக மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி முகாமுக்கு செல்லாமல், ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணி விளையாடுவதை அணி வீரர்களுடன் சேர்ந்து பார்த்தார்.ரோகித் சர்மா மும்பையை சேர்ந்தவர் என்பதால் தங்களுடைய அணி பைனலில் மோதுகிறது என்பதற்காக நேரடியாக வீரர்களை சந்தித்து அவர்களுடன் போட்டியை கண்டு களித்தார். மேலும் வீரர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். ரோகித் சர்மா வருகை மும்பை அணி வீரர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். முதல் இன்னிங்சில் 224 ரன்கள் ஆட்டம் இழந்த மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்கள் குவித்து இருக்கிறது.