சோனியா காந்தியின் தாயார் மறைவுமோடி இரங்கல்

புதுடெல்லி: செப்.1-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தாயார் பாவ்லா மைனோ மறைந்துள்ள நிலையில் சோனியா காந்திக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்