சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி,மார்ச்.3-
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சோனியா காந்தி சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். ராகுல் காந்தி நடத்திய பாத யாத்திரையில் சில இடங்களில் கலந்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார. இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.