சோம்பின் பல உபயோகங்கள்


சாமான்யமாக ஹோட்டல்களில் உணவு முடித்த பின்னர் பில்லுடன் சோம்பு வைப்பதை பார்த்திருக்கிறோம் . ஆனால் அதற்கான காரணம் அவ்வளவாக பெரும்பாலோர்ககு தெரியாது . அப்படி காரணம் தெரிந்தால் தினமும் சோம்பை தவறாமல் உபயோகிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை . எந்த உணவுக்கும் பின்னர் இரண்டு ஸ்பூன் சோம்பை மென்றால் அஜீரண பிரச்சினையே இருக்காது . உணவுக்கு பின்னர் மெல்வதால் வாய் துர்நாற்றமும் அடங்கும் . சோம்பை இரவு நீரில் ஊற வைத்து , காலையில் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண் தொடர்பான பல்வேறு குறைபாடுகளும் நீங்கும் . சோம்பை தண்ணீரில் கொதிக்கவைத்து அதில் டிகாஷன் செய்து குடித்தால் பெண்களின் ருது காலங்களில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் . வயிறு வலி மற்றும் வேறு தொல்லைகளும் நீங்கும் . தவிர மாத விடாய் எளிதாக ஆகும் . சோம்பு குழந்தைகளுக்கும் மிக மிக நல்லது . குழந்தைகளுக்கு உண்டாகும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சோம்பு மிகவும் நல்லது . குழந்தைகளுக்கு அஜீரண பிரச்சனை இருந்தால் ஒரு ஸ்பூன் சோம்பை மெல்ல வைக்க வேண்டும் . சொம்பை மென்று அதன் சாற்றை விழுங்குவதால் வயிறு மற்றும் அஜீரண பிரச்சனைகள் நீங்கும்