சோலார் பேனல் வீட்டில் அமைக்கும் போது -300 யூனிட் இலவச மின்சாரம்

டெல்லி: பிப். 2
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்கிற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற மத்திய அரசு அறிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலை பார்ப்போம். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூரிய ஒளி (சோலார்) மின்சார தகடுகளை அமைக்கும் ஒரு கோடி வீடுகளுக்கு, மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது, “சூரிய மின் திட்டம் மூலம் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடு (சோலார் பேனல்) அமைக்கும் நாட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த திட்டத்தால் சோலார் மின்சார பயன்பாடு மற்றும் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரு.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும். மேலும் உற்பத்தி, நிறுவல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் இந்த சோலார் திட்டம் வழங்கும்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்நிலையில் வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்கிற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற மத்திய அரசு அறிவிப்பது ஏன் என்று சிலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நாமளே உற்பத்தி பண்றோமே அப்புறம் எதற்கு அவங்க தரனும். நாம அவ்வளவு உற்பத்தி பண்ண முடியாதா? இல்ல பத்தாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.ஆனால் இது உள்ள உண்மை என்ன, சோலார் தகடுகள் எப்படி அமைப்பது இதில் உள்ள சிக்கல் என்ன என்பதை பார்ப்போம்.