சௌஜன்யா கொலை வழக்கில் நீதி கேட்டு நடைபயணம்

மங்களூரு, ஆக. 28: தென் கன்னட மாவட்டம் உஜ்ஜிரேவைச் சேர்ந்த‌ சௌஜன்யா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாய் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனர்.
தென் கன்னடம் நேத்ராவதி சன்னகட்டாவில் இருந்து தர்மஸ்தலா நுழைவு வாயில் வரை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபயணமாக வந்த சௌஜன்யாவின் தாய் குசுமாவதி, அன்னப்பசுவாமி மலை அருகே வந்து நீதி வேண்டி பிரார்த்தனை செய்தார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும். என் மகளின் ஆன்மா சாந்தியடையட்டும் என‌குசுமாவதி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தீரஜ் கெல்லா, மல்லிக் ஜெயின், உதயா ஜெயின் ஆகியோரும் அன்னப்பசுவாமி மலை அடிவாரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு, ‘சௌஜன்யா கொலை வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டன‌ர்.இதுகுறித்து தீரஜ் கெல்லா கூறுகையில், “சட்டப்படி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். எந்த வகையான விசாரணைக்கும் தயார். ஊடகங்களும் எங்கள் குடும்பங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அவதூறு பரப்பக்கூடாது என்றார். நடைபயணத்தின் இறுதியில் அன்னப்பசுவாமி மலை மற்றும் தலைவாசல் அருகே ஏராளமானோர் திரண்டனர். இதனைத்நேத்ராவதி ஸ்னானகட்டாவில் இருந்து தர்மஸ்தலா வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாதுகாப்பிற்கு மாவட்ட எஸ்பி ரிஷ்யந்த் தானே பொறுப்பேற்றிருந்தார். நடைபயணத்தின் போது அன்னப்பசுவாமி மலைக்கு முன்பாக போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாகனத்தை வெளியில் அனுப்பியதும் சூழல் சுமூகமானது.உஜ்ஜிரே சௌஜன்யா கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மனு தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க தெற்கு கன்னட மற்றும் உடுப்பி மாவட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர். பெல்தங்கடி ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட‌து. பாஜக எம்.பி நளின்குமார் கட்டீல் பேசுகையில், ‘சௌஜன்யா கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரையில் பாஜக போராட்டம் நடத்தும் என்றார்.