பெங்களூர், செப்.25-
கர்நாடக மாநில மக்கள் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண பெங்களூருவுக்கு அலைவதை தடுக்கும் வகையில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஜனதாதர்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது.
உள்ளூர் பிரச்னைகளை வைத்து, முதல்வர் அலுவலகத்துக்கு பெங்களூரு வருபவர்களை அவர்களின் சொந்த மாவட்ட, தாலுகா அளவில் பிரச்னைகளை தீர்க்கும் இந்த ஜனதாதர்ஷன் திட்டம் இன்று துவங்கியது.
இதுதவிர, மாதந்தோறும், மாவட்ட பொறுப்பு அமைச்சர், ஜனதாதர்ஷன் நடத்தி, மக்களின் பிரச்னைகளை கேட்டு புகார் மனுக்கள் பெற்று சம்பவ இடத்திலேயே தீர்த்து வைப்பார்
இன்று ஜனதாதர்ஷன் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், சிஇஓக்களுடன் இன்று ஜனதாதர்ஷன் நிகழ்ச்சி நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஜனதாதர்ஷன் திட்டத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனதா தரிசன நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் பிரச்னைகளுக்கு பதிலளித்தனர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் முன்னிலையில் ஜனதாதர்ஷன் திட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா வரும்30ம் தேதி மாநில அளவிலான ஜனதாதர்ஷன் நிகழ்ச்சி நடத்துகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் சித்தராமையா மக்கள் சின்ன சின்ன பிரச்னைகளுக்கு கூட பெங்களூருக்கு அலைகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் தாலுகா மற்றும் மாவட்ட அளவில் ஜனதா தரிசனம் நடத்த அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி இன்று முதல் ஜனதா தர்ஷன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
முதல்வர் சித்தராமையா இந்த ஜனதா தர்ஷன் திட்டத்தின் மூலம் நிர்வாக எந்திரத்தை முடுக்கி விட, ஜாதி சான்றிதழ், கணக்கு மாற்றம், டிரான்ஸ்பார்மர் பழுது போன்ற சிறு சிறு பணிகளுக்காக முதலமைச்சரை சந்திக்க வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் இந்த ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஜனதாதர்ஷன் திட்டம் தொடங்கியுள்ளது.
இந்த ஜனதாதர்ஷன் நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ளனர்.