ஜனதா தளம் ஆட்சி அமைக்கும்: குமாரசாமி நம்பிக்கை

The Chief Minister of Karnataka, Shri H.D. Kumaraswamy meeting the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, Shri Ram Vilas Paswan, in New Delhi on October 06, 2018.

பெங்களூர்: நவம்பர். 17 , எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 123 இடங்களில் வெற்றி பெரும் நோக்குடன் ம ஜ தா கட்சி தன்னுடைய பஞ்சரத்ன யாத்திரையை முலபாகிலின் குருடுமலேவிலிருந்து நாளை ஆடம்பரத்துடன் துவங்க உள்ளது என முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி தெரிவித்துள்ளார். குருடுமலே ஸ்ரீ கணபதி கோயிலிலிருந்து நவம்பர் முதல் தேதியிலேயே யாத்திரை துவங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த பேரணி தள்ளிப்போனது என குமாரசாமி தகவல் அளித்துள்ளார். தாய் சாமுண்டேஸ்வரிக்கு பூஜைசெலுத்திய பின்னர் முலபாகிளுக்கு வருகை தந்த பஞ்சரத்ன யாத்திரையை துவங்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். ம ஜ தா தேசிய தலைவர் ஹெச் டி தேவேகௌடா மூலபாகிலில் அனைத்து பூஜைகளையும் நடத்தி யாத்திரையை துவக்கி வைக்க உள்ளார். நாளை பிற்பகல் 2 மணிக்கு மூலபாகிலு பட்டணத்தின் திருப்பதி பை பாஸ் வீதியில் உள்ள பாலாஜி பவன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் மாபெரும் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் இரண்டு லட்ச மக்கள் சேரவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ம ஜ தா மாநில தலைவர் சி எம் இப்ராஹிம் , கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி உட்பட கட்சியின் அனைத்து எம் எல் ஏக்கள் , முன்னாள் அமைச்சர்கள் , அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.