ஜனவரி இறுதிக்குள் 30 கி.மீ. மழைநீர் கால்வாய் பணி நிறைவு

பெங்களூரு: நவம்பர். 24 – தலைநகர் பெங்களூரில் 30 கி மீ மழைநீர் கால்வாய்கள் திட்டப்பணியை ஜனவரி மாத இறுதிக்குள் முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்தார். நகரில் இன்று பெரிய கால்வாய்கள் குறித்து மாநகராட்சியில் கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் நகரில் அதிகளவில் மழை பெய்திருக்கும் நிலையில் தாழ்வு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் நிரம்பியுள்ளது.

ஏரியின் கீழ் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர் வாரி அவற்றின் நீர் போக்குவரத்தின் திறமையை அதிகரிக்க வேண்டும் என்ற விஷயம்தொடர்பாக இன்று கூட்டத்தில் விவாதகிக்கப்பட்டது. நகருக்குள்ளேயுள்ள மழைநீர் கால்வாய்களின் கல் கட்டுமானங்களை ஆர் சி சி க்கு மாற்றவேண்டும். புறப்பகுதி கிராமீய பகுதிகளில் மண்ணால் கட்டப்பட்டுள்ள கால்வாய்கள் உள்ளன. 110 கிராமங்களில் ஆர் சி சி கால்வாய்களை கட்டி அவற்றின் அகலத்தையும் அதிகப்படுத்தவேண்டும். அங்கங்கு கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.