ஜனாதிபதி தேர்தலில் விதிமிறல் திரௌபதிக்கு எதிராக காங்கிரஸ் புகார்

பெங்களூர் : ஜூலை . 20 – ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டின் கீழ் என் டி ஏ ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா ஜூலை 17 மற்றும் 18 அன்று வாக்காள எம் எல் ஏக்களுக்கு லஞ்சம் மற்றும் வேறு பல சலுகைகள் அளித்துள்ளதன் வாயிலாக தன் செல்வாக்கை காட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது . காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் வாக்காள எம் எல் ஏக்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆடம்பர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது என புகார் தெரிவித்துள்ளனர். என் டி ஏ வேட்பாளர் திரௌபதி முர்மு , முதல்வர் பசவராஜ் பொம்மை , பி ஜே பி மாநில தலைவர் நளீன் குமார் கட்டீல் , பி ஜே பி மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பா , சட்டமன்ற பி ஜே பி கொறடா சதீஷ் ரெட்டி , அமைச்சர்கள் மற்றும் வேறு பலருக்கு எதிராக புகார் பதிவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து எம் எல் ஏக்களுக்கு பயிற்சி அளிக்கும் சாக்கில் பி ஜே பி யின் மற்ற மூத்த தலைவர்கள் ஒன்று கூடி அனைத்து பி ஜே பி எம் எல் ஏக்களையும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து அவர்களுக்கு ஆடம்பர அறைகள் , உணவு , மது மற்றும் கேளிக்கை ஆகிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். பி ஜே பி எம் எல் ஏக்களுக்கு இவ்வளவெல்லாம் வசதிகள் அளித்திருப்பதன் வாயிலாக திரௌபதி முர்முவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தேவையற்ற அழுத்தத்தை கொடுத்திருப்பது தேர்தல் நீதி நியமங்களை மீறியதாகும் என காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.