ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா

புதுடெல்லி,ஜூலை 22-
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக 2017ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பல்வேறு மாநில முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள், பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் பதவியேற்றுக் கொள்கிறார்.