ஜனார்த்தன ரெட்டி பிஜேபியில் இணைந்தார்

பெங்களூரு, மார்ச் 25: கேஆர்பிபி கட்சி நிறுவனரும், கங்காவதி எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார்.
கேஆர்பிபி கட்சியின் நிறுவனரும், கங்காவதி எம்எல்ஏவுமான ஜனார்தன் ரெட்டி இன்றுபிஎஸ் எடியூரப்பா மற்றும் பிஒய் விஜயேந்திரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பி.ஒய்.விஜயேந்திரர் ஜனார்த்தன ரெட்டியை கட்சி கொடி வழங்கி, வரவேற்றார். கேஆர்பிபி கட்சியும் பாஜகவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி பெல்லாரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்கள் அனைவருடனும் இன்று பாஜகவில் இணைந்தார்.ஜனார்த்தன ரெட்டி பெல்லாரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்கள் அனைவருடனும் இன்று பாஜகவில் இணைந்தார்.
அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: எந்த கோரிக்கையும் முன் வைக்காமல் பாஜகவில் இணைந்துள்ளேன். 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எனது வீடான பாஜகவிற்கு வந்துள்ளேன். சாதாரண தொண்டனாக பாஜகவில் பணியாற்றுவேன். 3 வது முறையாக மோடி அவர்களை பிரதமராக்க கடுமையாக பாடுபடுவேன் என்றார்.