ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த புயல்

டோக்கியோ: செப். 21-
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
புயல், மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.