ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு – ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு: நவம்பர் 19 –
கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.