ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், செப்டம்பர் : 1 – காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் 2 பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.