
பெங்களூர் அக் 10-
காங்கிரஸ் அரசு கல்வி பொருளாதாரம் கணக்கெடுப்பை நடத்தியதா அல்லது ஜாதி வாரி கணக்கெடுப்பை செய்ததா என்பது முதலில் காங்கிரஸ் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அப்போதுதான் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உத்தரவில் எங்கும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார் .
செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் அரசு பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்த ஆய்வை நடத்தியது. இதற்காக 160 கோடி ரூபாய் செலவழித்து தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தனர் .
ஆனால் அதை அரசு வெளியிடப்படவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு இல்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்துவோம்.ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று உத்தரவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதை எப்படி செய்தனர் என்பதை முதல்வர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.கணக்கெடுப்பு அறிக்கை வெளிவரட்டும் அதை பார்த்து விவாதிக்க வேண்டும். அதன் சாதக பாதகங்கள் என்ன. சமூகத்தில் இதன் விளைவுகள் என்ன. சில குழுக்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்துமா.இதையெல்லாம் விவாதிக்கட்டும் என்றார்.எனது தொகுதியில் பொதுப்பணித்துறை பணிகள் குறித்து விசாரணை நடந்தால், தவறு கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கட்டும்.பணியை முறையாக செய்து ,பில் கொடுத்தாலும் பணம் விடுவிக்கவில்லை. இந்த அரசு வந்த பிறகு பெங்களூர் உட்பட பல இடங்களில் ஆய்வுப்பணி நடத்த மசோதா நிறைவேற்ற வில்லை.
மாநில அரசுக்கு மத்திய அரசு அடித்த அடி இது.வறட்சி வந்தாலும் மத்திய அரசை சுட்டிக்காட்டுவார்கள். காவிரி பிரச்சனை மின்துறை எது வந்தாலும் அது மத்திய அரசு மீது பழி போடுவது வழக்கம்.மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரி சப்ளை இருந்தால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. இவர்கள் நிதிநிலை போதிய மின் மேலாண்மை இல்லாததே மாநிலத்தின் மின் பற்றாக்குறைக்கு காரணம்.மின்சாரம் வழங்குவதும் மாநில அரசின் பொறுப்பு.இவ்வாறு அவர் தனது பேட்டி தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசு