ஜாமினை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

டெல்லி, மே 29-
முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பணமோசடி வழக்கில் வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்றும், இதற்காக ஜூன் 1ம் தேதியுடன் முடிவடையும் இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவல் உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்தது. இதனை இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கமான ஜாமின் கோரி கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.