ஜிஎஸ்டி நிவாரண கால கட்டத்தை நீடிக்க மத்திய அரசு மறுப்பு : முதல்வர்

பெங்களூர்: ஜூலை. 20 – மாநிலங்களுக்கு அளித்துவரும் சரக்கு மற்றும் சேவைகள் வரியான ஜி எஸ் டி நிவாரண கால கட்டத்தை நீடிக்க மத்திய அரசு மறுத்துள்ளது . ஜி எஸ் டி நிவாரண காலகட்டம் முடிந்துள்ள நிலையில் மேலும் ஓராண்டிற்கு இதை விரிவு படுத்துமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன . ஆனால் இப்போது மத்திய அரசு இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என கூறியிருப்பதில் பல மாநிலங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மைசூரில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட விதிமுறைப்படி இது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக கூறினார். அனைத்து கட்சிகள் , மாநில அரசுகள் பாராளுமன்றத்தில் சேர்ந்து முடிவெடுத்துள்ள சட்டம் ஜி எஸ் டி . இந்த சட்டத்தை உருவாக்கியபோதே வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஜி எஸ் டி நிவாரணத்தொகை உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று நாடு முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்தியிந்தபோதும் எவ்வித வரி வசூலிப்புகள் கிடைக்காதிருந்த நிலையிலும் நிலையிலும் உதவி தொகையை மத்திய அரசு அளித்துவந்துள்ளது. என முதல்வர் தெரிவித்தார்.