ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி

புதுடெல்லி: ஜனவரி . 2 – சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வாயிலாக சென்ற டிசம்பரில் ரூ.1.64 லட்சம் கோடி வசூலாகியுள்ளது என நிதியமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து மேலும் கூறியதாவது:கடந்த 2022 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1.49 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், 2023 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.64 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் உயர்ந்து ரூ.14.97 லட்சம் கோடியாக இருந்தது. இது, 2022-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.13.40 லட்சம் கோடியாகஇருந்தது.சென்ற டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,64,882 கோடியாக இருந்த நிலையில், மத்திய ஜிஎஸ்டி ரூ.30,443 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,935 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.84,255 கோடியாகவும், செஸ் ரூ.12,249 கோடியாகவும் இருந்தது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.