ஜிகா வைரஸ் – கர்நாடக மாநிலத்தில் முழு உஷா நிலை

சிக்கபள்ளாபூர் : நவம்பர். 3 – மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கொசு மாதிரியில் சிகா கிருமி தெரிய வந்துள்ள நிலையில் மாநில சுகாதாதார துறை விழித்துக்கொண்டுள்ளது . மாநிலத்தில் இந்த வகை கிருமி தென்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். சிக்கபள்ளாபூரிலிருந்தும் மற்றும் பெங்களூரிலிருந்தும் தினசரி பல்லாயிர மக்கள் பயணித்து வரும் நிலையில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏட்ஸ் என்ற வகை கொசுவால் பரவும் இந்த கிருமியால் தாக்கப்பட்டவர்கள் , அரிப்பு , காய்ச்சல் , மூட்டு வலிகள் , மற்றும் தலைவலி ஆகியவற்றால் பாதிப்புக்களாகுவர் . இந்த சிகா கிருமியால் உருவாகும் நோய்களுக்கு தற்போதைக்கு எவ்வித சிகிச்சையும் இல்லை. இந்த வகையில் மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த கொசு தாக்கலின் மாதிரி கடந்த செப்டெம்பர் 25 அன்று சிட்லகட்டா தாலூகாவின் தல்கெயளபெட்டா என்ற கிராமத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலத்தில் கர்பிணியர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 68 இடங்களில் சிகா தொற்று குறித்து சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளபடி டிப்புரஹள்ளியை சேர்ந்த 30 வயதானவர் , தளகயலபெட்டா வை சேர்ந்த 38 வயது பெண்மணி , மற்றும் பச்சனஹஹள்ளியை சேர்ந்த 50 வயது பெண்மனி ஆகியோர் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களின் ரத்த மாதிரிகள் புனேவின் தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் மாநில சுகாததுறை தளகயலபெட்டா , வேங்கடபுரா , டிப்புரஹள்ளி , பச்சனஹள்ளி , மற்றும் வட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றுப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது .என சிக்கபள்ளாபூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி முனைவர் எஸ் எஸ் மகேஷ் தெரிவித்துள்ளார். . இதுவரை 31 கர்ப்பிணி பெண்கள் உட்பட 38 ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும் மகேஷ் தெரிவித்தார்.