ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு – வருத்தம் அளிக்கிறது – பைடன்

நியூயார்க், செப்டம்பர். 4
டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் சீன அதிபர் ஜின்பிங் தவிர்க்க திட்டமிட்டு உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் டெலாவர் நகரில் ரெகோபத் பீச் பகுதியில் நிருபர்கள் கேட்டபோது பதிலளித்த பைடன், ஏமாற்றமளிக்கிறது. ஆனால், நான் அவரை சந்திக்க போகிறேன் என கூறினார். எனினும், ஜின்பிங்கை வேறு எந்த இடத்தில் சந்திக்க போகிறேன் என்ற தகவலை பைடன் கூறவில்லை.