ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க்கபிரதமர் மோடி இத்தாலி பயணம்

புதுடெல்லி, ஜூன் 13:
மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டு பயணம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி,
இத்தாலியில் நாளை நடைபெறும் 50வது ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு மற்றும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்று வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்தார். நாளை இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் 50வது ஜி-77 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள அவர், பல நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.இருதரப்பு பேச்சுவார்த்தை உட்பட மற்ற தலைவர்களுடனான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
பேச்சுவார்த்தையை அமெரிக்கா உறுதி செய்தது
இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டின் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி செல்லும் வழியில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேக் சல்லிவன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜோ பைடன் கூறினார்.