ஜூன் 14ஆம் தேதி முதல் சுங்க வரி வசூல்

பெங்களூர், ஜூன் 10-
சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு, தாபஸ்பேட் – ஹொஸ்கோட் வரையில்
‘டோல்’ எனும் சுங்கவரி ஜூன் 14 முதல் வசூல் செய்ய உள்ளது.
கார் உரிமையாளர்கள் 80 கி.மீ., ரிங் ரோட்டை பயன்படுத்தி தும் கூர் சாலை, தொட்ட பல்லாப்பூர், தேவனஹள்ளி வழியாக
பெங்களூர் – கோலார் சாலையில் செல்பவர்கள் ஒருமுறை செல்ல 185 ரூபாய் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். அன்றைய தினமே திரும்ப கட்டணம் 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொட்ட பல்லாப்பூர் – ஹொசகோட்டா
34 கி.மீ., இணைப்பு சாலை திறக்கப் பட்டுள்ளது. நெல்லூரு – தேவன் ஹள்ளி பிளாசா சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற இணைப்பு சாலை பணி தாமதமாகி வருகிறது. இச்சாலையை லோக் சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் துவங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11 ல் திறந்து வைத்தார். தற்போது நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ளது. ஆயினும் தாபஸ்பேட் – தொட்டபல்லாப்பூர் சாலை சுங்க கட்டண வசூல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை குழுமத்தின் திட்ட இயக்குனர் கே.பி.ஜெயகுமார் கூறுகையில், 40 கி.மீ. இணைப்பு சாலையில் உள்ள தாபஸ்பேட் – தொட்டபல்லாப்பூர் பகுதிக்கு உட்பட்ட 40 கி.மீ., தூர ஹுலிகுண்டே சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நகர பகுதிக்குள் நுழையாமல்,
தும்கூர் சாலை ஹொசகோட்டை பைபாஸ் சாலையில் நெரிசல் இல்லாமல் எளிதில் வாகனங்கள் செல்ல முதல் ரிங் ரோடு இதுவாகும் .
இங்கு தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டிரக் வாகனங்கள் இயங்கி வருகிறது. சென்னை – பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் இயங்க துவங்கினால் ஹொசகோட்டை சாலையில் மேலும் அதிக வாகனங்கள் இயங்கும்.
எட்டு இடங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை பாதுகாப்புக்காக
ஆட்டோமெடிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் எனும் ஏ.என்.பி.ஆர்., மையங்கள் ஏற்படுத்த உள்ளது.
இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டன்ட் செய்வது தெரிய வந்துள்ளது. இது உயிருக்கு உத்தரவாதம் இல்லாதது. எனவே இதன்பேரிலும் கூட அவசிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை த்துறை ஆணையம் 15 இடங்களில் பஸ் நிலை யங்கள் ஏற்படுத்தவும் இடத்தேர்வு செய்துள்ளது. 12 இடங்களில் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.