ஜூன் 15 – உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
முதியவர்களின் அதிகமான இளைஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், பணப்புழக்கமுமே தலைமுறை இடைவெளிக்கு காரணமாகிறது. இதைத் தவிர வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள இளைய சமுதாயத்தினரின் வறுமை காரணம், மது மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றாலும் முதியோரை மதிக்காத ஒருநிலை ஏற்பட காரணமாகிறது. முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும். உதாரணம்:அவமதிப்புகள் பலவிதம்மனம் சார்ந்தது: வெளியில் கூட்டுக் குடும்பம் என்று சொல்லிக் கொண்டு வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் மனதளவில் காயப்படுத்துதல்.
வாய் மொழி சார்ந்தது: வீட்டில் இருக்கும் முதியவர்களை அடிக்கடி திட்டுவது அல்லது சண்டை போடுவது.பொருள் சார்ந்தது : காசோலையில் பொய் கையெழுத்திட்டு பணம் எடுப்பது. உயில் எழுதும்படி வற்புறுத்துதல்.
உடல் சார்ந்தது : மது போதையில் முதியோரிடம் பணம் கேட்டு துன்புறுத்துவது மற்றும் அடிப்பது.
முதுமையில் யார் எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்?
எந்த வருமானமோ, சொத்தோ இல்லாமல் இளைஞர்களை சார்ந்திருப்பவர்கள்
ஒரே குழந்தையைப் பெற்ற முதியவர்கள்
நாள்பட்ட நோயால் படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், உ.ம். : மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம்
தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் முதியவர்கள்.
பணம் பெரியவர்களிடமிருந்து மாதாமாதம் வரும் வரை அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அது நின்றதும் அவரின் நிலை ஒரு ஆறாம் விரலாக ஆகிவிடுகிறது.
முதியவர்கள் யாரால் அவமதிக்கப்படுகிறார்கள்?
முதியவர் வீட்டில் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது இடவசதி மற்றும் நிதி வசதி குறைவினால் அவமதிக்கப்படுகிறார்.
முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களைப் பார்த்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இதன் விளைவாக முதியவர்களிடம் மன இறுக்கத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
மது மற்றும் மருந்துக்கு அடிமை ஆகி வரும் இளைஞர்கள்.முதியவர்களின் சொத்துக்காக ஆசைப்பட்டு பொய்யாக முதியவர்களை கவனித்து கொள்ளும் உறவினர்கள்.மனதளவிலும் உடலளவிலும் மற்றும் பலவகையான அவமதிப்புக்கு ஆளாகும் முதியவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். ஏனெனில் முதியவர்கள் இதைப்பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தால் முதியவர்கள் மேலும், மேலும் அவமதிப்புக்கு உள்ளாவார்கள். ஆகையால் இவர்கள் படும் இன்னலை குடும்ப மருத்துவர், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.