ஜூன் 19 நள்ளிரவு 1.30 மணிவரைமெட்ரோ ரயில் சேவை

பெங்களூர்: ஜூன். 16 – நகரின் சின்னசாமி விளையாட்டரங்கில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதி டி – 20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 அன்று இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான கடைசி டி-20 போட்டி நடைபெற உள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த போட்டி முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி செல்பவர்களுக்கு வசதியாகும் வகையில் கூடுதல் நேரத்திற்கு மெட்ரோ ரயில்கள் விடப்பட உள்ளன. அன்று இரவு 1.30 மணிவரை மெட்ரோ போக்குவரத்து இருப்பதுடன் பொது மக்களின் வசதிக்காக காகித டிக்கெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இரவு பத்து மணிக்கு பின்னர் பேப்பர் டிக்கெட்டுகளுக்கு வசதி செய்ய பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்தும் 50 ரூபாய்க்கான டிக்கெட் வசதிகள் செய்யப்பட்டிருப்பதுடன் ஊதா மற்றும் பச்சை மார்க்கங்களில் இரவு 1.30 மெட்ரோ ரயில்கள் ஓட உள்ளன.