ஜூன் 2ம் தேதி வரை கர்நாடகத்தில் மழை

பெங்களூர் : மே . 31 – மாநிலத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் இரண்டு வரை மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. கடலோர மாவட்டங்களில் பல பகுதிகள் மற்றும் மாநிலத்தின் சில உட்பகுதிகளில் இடி மின்னல்களுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர அனைத்து மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் பகுதிகளான பாகல்குண்டே , பெலகாவி , பீதர் , கலபுரகி , கொப்பலா , விஜயபுரா ,மற்றும் தெற்கு உட்பகுதிகளான பெங்களூர் நகரம் , கிராமந்தரம் , சாமராஜநகர் , சிக்கபள்ளாபுரா , சிக்கமங்களூரு , சித்ரதுர்கா , ஹாசன் , குடகு , கோலார் , மண்டியா , மைசூர் , ராம்நகர் , மண்டியா , சிவமொக்கா , மற்றும் துமகூரு மாவட்டங்களில் ஆங்காங்கு இடி மின்னல்களுடன் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு உட்பகுதிகளான சாமராஜநகர் , ஹாசன் , மண்டியா , மைசூர் மற்றும் ராம்நகர் மாவட்டங்களிலும் ஆங்காங்கு மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு பெங்களூரில் மேகம் சூழ்ந்த வானிலை இருப்பதுடன் இடி மின்னல்களுடன் மழைபெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.