தூத்துக்குடி, ஜூலை 1 –
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இந்த பணி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை காலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.