ஜோ பைடனுடன் ஆஸ்திரேலியா பிரதமர் சந்திப்பு

ஆஸ்திரேலிய, மார்ச் 8- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 5 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். இந்த பயணத்திற்கு பிறகு, அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருப்பதாவும், அதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இந்தியா புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம், “அமெரிக்க நிர்வாகத்துடன் நான் வைத்திருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்நோக்குகிறேன். நடக்கும் ஏற்பாடுகளின் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அமெரிக்க பயணத்திற்கான தேதியை குறிப்பிடாமல் தெரிவித்தார்.
அல்பானீஸ் அடுத்த வாரம் தனது அமெரிக்க பயணத்தின் போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.